திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அரசு பேருந்தும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் பயணிகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.