புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இளைஞர் உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற கந்தர்வகோட்டை போலீசார், உயிரிழந்த ராஜேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.