கடலூர் மாவட்டம் பண்ருட்டி-யில் அமைந்துள்ள பிரபல நேஷனல் ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின.முகமது ரிஷ்வான் என்பவருக்கு சொந்தமான 3 தளங்கள் கொண்ட ஷாப்பிங் மாலில் வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள் என அனைத்து வகையான வீட்டு உபயோக பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் காலை ஊழியர்கள் கடையை திறந்த போது தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து விரைந்து வந்த அவர்கள், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.