கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதிக்கு கேரளாவில் இருந்து கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கண்டெய்னர் டெம்போவை நாம் தமிழர் கட்சியினர் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கண்டெய்னர் டெம்போவிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகம், அந்த வாகனத்தை மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பினர்.