சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் பகுதியில், பாஜகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் பாஜகவை சேர்ந்த நபருக்கு காயம் ஏற்பட்டது. பேரூராட்சி கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் மக்கள் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், திமுக துணைத் தலைவருக்கும், கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.