செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம் ஏரியில் முட்புதரில் வீசப்பட்டிருந்த பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை, பத்திரமாக மீட்டு முதலுதவி செய்த ஊராட்சி தலைவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஏரிக்கு மாடு மேய்க்க சென்ற முதியவர், முட்புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் சென்று பார்த்த போது பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் கட்டைப் பையில் வைத்து வீசப்பட்டிருந்தது. அருகிலிருந்த இளைஞர்கள் மூலம் ஊராட்சி தலைவி மேரி தமிழ்ராணிக்கு தகவலளித்தார். விரைந்து வந்த ஊராட்சி தலைவி முட்புதரில் இருந்து குழந்தையை மீட்டதோடு, பி.எஸ்.சி நர்சிங் படித்தவர் என்பதால் உடம்பில் குத்தியிருந்த முட்களை லாவகமாக அகற்றி முதலுதவியும் செய்தார். மேலும் போலீசார் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.