வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குளுக்கோஸ் ஏற்றுவதற்காக பச்சிளம் குழந்தை உடலில் நரம்பு கிடைக்காமல் பல இடங்களில் ஊசி குத்தியதாகவும், அதனால் குழந்தை பலியானதாகவும் கூறி, தாய் கதறி அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.