500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் : புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வருவதாக போதைப்பொருள் தடுப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் எஸ்ஐ.ஆனந்தன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டியிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமான வகையில் வெளி மாநிலத்திலிருந்து வந்த ஒரு வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார் வாகனத்தில் இருந்த இரண்டு இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள் கொண்டு வந்தது தெரிய வந்தது.அவர்களிடமிருந்து 500 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். பிடிபட்டவர்களில் ஒருவர் பெங்களூரை சேர்ந்த தீப்சிங் என்பதும் மற்றொருவர் மைசூரை சேர்ந்த அக்பர் கான் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.இருவரிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப்,ஒரு ஐபோன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.இச்சம்பவம் பொன்னமராவதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Related Link நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து