விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த மேல்வாலை கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் மனைவி ஷாலினி இவர் தனது மாமியாருடன் நேற்று அவரது தாய் வீடான மரக்காணம் அடுத்த தேன்பாக்கம் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீடு திரும்ப விழுப்புரத்திலிருந்து மேல்வாலை கிராமத்தில் உள்ள புகுந்த வீட்டிற்கு வந்துள்ளார் .இதனைதொடர்ந்து மேல்வாலை வந்து இறங்கிய போது அவரது கட்டைபையில் இருந்த 5 சவரன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஷாலினி அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் படி, அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் ஷாகுல் அமீது தலைமையில் உதவி ஆய்வாளர் காத்தமுத்து மற்றும் காவலர்கள் கண்டாச்சிபுரம் மேல்வாலை உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.அதில் சந்தேகப்படும் வகையில் இருபெண்கள் பேருந்தில் நடந்து கொண்டதும்,அதே பெண்கள் கண்டாச்சிபுரத்தில் இறங்கி திருக்கோயிலூர் மார்க்கம் சென்றதும் தெரிய வந்ததுள்ளது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு பெண்களை தேடி சென்றபோது அவர்கள் திருக்கோயிலூர் பேருந்து நிலையத்தில் வேறோரு பேருந்தில் இருந்ததுள்ளனர். அங்கு சென்ற கண்டாச்சிபுரம் போலிசார் அந்த இரு பெண்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி உள்ளனர். அதில் இருவரும் பேருந்தில் நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புகொண்டுள்ளனர். மேலும் இருவரும் ஓசூர் தெய்வமங்கலம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் இரு மனைவிகளான பல்லவி மற்றும் காவியா என்பதும் தெறியவந்துள்ளது.இருவரும் அக்கா தங்கை எனவும், பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து இரு பெண்கள் மீதும் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இருரையும் கைது செய்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட பெண்களிடம் இருந்து 5 சவரன் நகைகளை போலிசார் மீட்டுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை 10 மணி நேரத்தில் மீட்டு இருபெண்களை அதிரடியாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.