மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 400 கிலோ பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவில்பத்து நான்கு வழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சீர்காழி போலீசார், அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 40 மூட்டைகளில் வெடிகள் இருந்தது தெரியவந்தது.