திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, முறையான ஆவணமின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியாவை சேர்ந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சின்னேரிபாளையம் கிராமம் கணேசபுரத்தில் தங்கியிருந்த அந்த நால்வரின் விசா காலாவதியான நிலையில், அவர்களை சென்னையில் உள்ள புழல் சிறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.