திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் மற்றும் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக சார்பில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 4 பேரும், சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் இருந்து வெற்றிச் சான்றிதழை பெற்றனர்.