கோவையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்கில் சென்ற 3 பேர் தடுப்புகளை மீறி தவறி விழுந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பள்ளம் மூடப்பட்டது. ஒண்டிப்புதூர் பகுதியில் சாலையோரம் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அவ்வழியே சென்ற பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அதில் பயணித்த 3 பேர் அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்து காயமடைந்தனர். பின்னர் தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை மூடி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இது போன்ற பணிகள் நடக்கும் போது பெயரளவில் தடுப்புகளை வைக்காமல் உறுதி தன்மையுடன் வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.