Also Watch
Read this
Posted on: Jan 10, 2026 02:20 PM
By: Manigandan Raja

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை வழியாக செல்லும் ஹவுரா- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், ஆம்பூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ரயில் பெட்டியில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved