Also Watch
Read this
Posted on: Oct 10, 2024 01:53 AM
By: Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் சென்ற 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 166 விசைப்படகுகளில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், மீனவர்களின் 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved