கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே மூலசமுத்திரம் எம்.எஸ்.தக்கா கிராமத்தை சேர்ந்த அப்துல் வாஹித் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அவரது மனைவி மதினா வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது, கொள்ளை நடந்துள்ளது.