தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1000 பனை விதைகள் நடும் விழாவில் மாணவிகள் பங்கேற்று ஆர்வமுடன் விதைகளை நட்டனர்.அண்மையில், பனை மரத்தினால் ஏற்படும் பலன்கள் குறித்து கல்லூரி மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக மாணவிகள் தங்களது சொந்த செலவில் ஆயிரம் பனை விதைகளை வாங்கி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பல்வேறு இடங்களில் குழி தோண்டி பனை விதைகள் நடப்பட்டன.