சென்னை பூவிருந்தவல்லியில் 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த குட்கா கடத்தல் மன்னனை போலீசார் கைது செய்தனர். சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்தனர். லாரியில் குட்கா இருந்ததும், பெங்களூருவிலிருந்து கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகலிங்கம் தலைமறைவான நிலையில் மாங்காட்டில் வைத்து மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.