செங்கல்பட்டு மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஓமியம் என்ற நிறுவனத்துடன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஆலையின் மூலம் 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.