சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253 வது நினைவு வீரவணக்க நாளை முன்னிட்டு பச்சேரி கிராமத்தில் அவரது வம்சாவழியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து மரியாதை..... தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253 வது நினைவு வீரவணக்க நாளை முன்னிட்டு அவரது நினைவு தூணிற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருகை தர உள்ளனர். இந்தநிலையில் அவரது வம்சாவளியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊரின் முக்கிய வீதிகளில் உலா வந்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது நினைவு தூணிற்கு பாலாபிஷேகம் செய்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அவரது நினைவு தூண் முன்பாக பெண்கள் கும்மி அடித்தது குறிப்பிடத்தக்கது....