உலக மக்களையே திரும்பி பார்த்து வியக்க வைக்கும் வகையில் இருந்தது அம்பானி வீட்டின் திருமண நிகழ்வு. இங்கு பரிமாறப்பட்ட உணவுகளில் இருந்து, வந்திருந்த விருந்தினர்களுக்கு கொடுத்த தாம்பூலம் வரை அனைத்திற்கும் அத்தனை கோடி செலவு செய்திருக்கின்றனர். இந்த நிலையில், இத்திருமண நிகழ்வில் கலந்து கொள்ளாதவர்கள் யார் யார் என்று தெரியுமா? ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வு:டாப் 10 உலக பணக்காரர்களின் பட்டியலில் இருக்கும் இந்தியர்களுள் ஒருவர், முகேஷ் அம்பானி. இவரது வீட்டில் திருமண நிகழ்வு நடக்க இருப்பதை அறியாத இந்தியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உலக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள இந்த திருமண நிகழ்வில் திரைவுலகம் மட்டுமின்றி பல்வேறு துறை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்டை கடந்த ஜூலை 12ஆம் தேதி கரம்பிடித்தார்.இந்த ஆண்டின் மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை மூன்று நாட்கள் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் நடைபெற, அதிலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதற்கான செலவு மட்டும் சுமார் ஆயிரம் கோடிக்கு மேலானதாக தகவல் வெளியானது. அதேபோல, இவர்களின் திருமண நிகழ்வுக்கும் ஆஸ்கரை தொகுத்து வழங்கும் அளவிற்கு பட்ஜெட் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சுமார் 5,000 கோடி அளவில் செலவாகி இருக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. பங்கு பெற்ற பிரபலங்கள்: அம்பானியின் திருமண நிகழ்வில், ஜஸ்டின் பீபர், ரிஹானா உள்ளிட்ட பல உலக புகழ்பெற்ற பாடகர்கள் வந்து இசை நிகழ்ச்சி நடத்தினர். அதேபோல உலக நிறுவன தலைவர்களான மார்கு ஜக்கர்பெர்க், பில்கேட்ஸ், முன்னாள் அமெரிக்க தலைவர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெளிநாட்டினரே இவ்வளவு பேர் இருக்கும்போது இந்திய பிரபலங்கள் கலந்து கொள்ளாமல் இருப்பார்களா என்ன? கிரிக்கெட் வீரர்கள் தோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் உள்ளிட்டோரிலிருந்து பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன் குடும்பம், கபூர் குடும்பம் என பலர் கலந்து கொண்டனர். தமிழ் மற்றும் தென்னிந்திய பிரபலங்களான ரஜினிகாந்த், நயன்தாரா, அட்லீ, சூர்யா ஜோதிகா, ராம் சரண், பிரித்விராஜ், ராணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கலந்து கொள்ளாதவர்கள்: ஒட்டுமொத்த பணக்கார வர்க்கமும், திரை நட்சத்திரங்களும் அம்பானியின் குடும்ப நிகழ்வு கலந்து கொண்டாலும் ஒரு சில பிரபல நடிகர்கள் இந்த நிகழ்வை ஒதுக்கி இருக்கின்றனர் அப்படி கலந்து கொள்ளாதவர்கள் யார் யார் தெரியுமா? அக்ஷய் குமார்: பாலிவுட் பிரபல நடிகராக வலம் வரும் இவர், அம்மா நீயும் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. காரணம், இவருக்கு கொரோனா பாசிடிவ் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கரீனா கபூர் சயிப் அலிகான்: இவர்கள் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு கலந்து கொண்டனர். ஆனால் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. விராட் கோலி:அனுஷ்கா சர்மா: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அம்பானியின் எந்த திருமண நிகழ்வுகளும் கலந்து கொள்ளவில்லை. இவர் தற்போது தனது மனைவியுடன் லண்டனில் இருப்பதால் இது கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.சோனாக்ஷி சின்ஹா: சமீபத்தில் ஜாகிர் இக்பாலை கரம் பிடித்த சோனாக்ஷி சின்ஹா, இந்த திருமண நிகழ்வை புறக்கணித்திருக்கிறார். அவருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டதா என்பதை சந்தேகமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அஜித்-விஜய்: தமிழ் திரையுலகில் ஸ்டார் நடிகர்கள் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர்கள் அஜித்-விஜய். அனைத்து ஸ்டார் நடிகர்களுக்கும் அழைப்பிதழ் சென்றிருக்க, இவர்களுக்கும் அது கிடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இருவரும் உங்கள் கலந்து கொள்ளவில்லை என்பதால் அழைப்பிதழ் சென்றதா என்பது சந்தேகமாக இருக்கிறது. கமல்ஹாசன்: இதுபோன்ற பிரம்மாண்டமான திருமண நிகழ்வுகளை புறக்கணிப்பவர் கமல்ஹாசன். அதுமட்டுமின்றி, சித்தாந்த கொள்கைகளும் அரசியல் கொள்கைகளும் பலரை பல நேரத்தில் கோபம் கொள்ள செய்து இருக்கிறது. இதனால் இவருக்கு அம்பானியின் திருமண பத்திரிக்கை வழங்கப்படாமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.