டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்டத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்திற்கு WITH LOVE என பெயரிடப்பட்டுள்ளது.ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் அபிஷன் ஜீவிந்த்க்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இத்திரைப்படம் 2026 பிப்ரவரியில் வெளியாக உள்ளதாக படக்குழு டீசரில் அறிவித்துள்ளது.