"ஆரண்ய காண்டம்" ரீ ரிலீஸ் குறித்த அப்டேட் :"ஆரண்ய காண்டம்" திரைப்படத்தின் ரீ ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வரும் 13-ம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக போஸ்டரை வெளியிட்டு திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த திரைப்படம் பல விருதுகளை வென்று குவித்தது குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்டபோது கவனத்தை ஈர்க்காமல், அதன் பிறகு மக்களால் கொண்டாடப்பட்ட இந்த படத்தின் ரீ ரிலீஸ் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.உண்மை காரணத்தை கூறிய இயக்குநர் சுந்தர்.சி :கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் ரஜினிகாந்தின் 173வது படத்தில் இருந்து விலகியதற்கு, கருத்து வேறுபாடோ அல்லது வேறு பிரச்சனையோ காரணமில்லை என இயக்குநர் சுந்தர்.சி விளக்கமளித்துள்ளார்.சமீபத்திய நேர்காணலில் இது தொடர்பாக பேசிய அவர், ரஜினிகாந்தின் படத்தை இயக்குவது பெரிய வாய்ப்பு, ஆனால் கதை மற்றும் தயாரிப்பு திட்டங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டதாலும், தாம் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த பிற திரைப்படங்களின் வேலைகள் இருந்ததாலும் அந்த படத்தில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிவித்தார். ரஜினி மீது தமக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் அவருடன் மீண்டும் பணியாற்றுவேன் எனவும் கூறினார்.மனைவிக்கு ஆடம்பர மெர்சிடிஸ் பென்ஸ் ஏ.எம்.ஜி. கார் பரிசு :திருமண நாளையொட்டி, நடிகர் அல்லு அர்ஜூன் தனது மனைவிக்கு ஆடம்பர மெர்சிடிஸ் பென்ஸ் ஏ.எம்.ஜி. காரை பரிசளித்துள்ளார். இந்திய திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம்வரும் அல்லு அர்ஜூன் - அல்லு ஸ்னேகா ரெட்டி தம்பதி தங்களது 15-வது திருமண நாளை கொண்டாடினர். இதையொட்டி, தனது மனைவிக்கு அவர் கார் பரிசளித்த நிலையில், அல்லு அர்ஜூன் தரப்பில் வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த ஆடம்பர காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.பணம் கொடுத்து ட்ரோல் செய்வதாக நடிகை பகீர் :நடிகை பிரியங்கா மோகன் தனக்கெதிராக சிலர் திட்டமிட்டு பணம் கொடுத்து ட்ரோல் பதிவுகளை வெளியிடச் செய்வதாக சந்தேகம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சமூகவலைதளங்களில் நடைபெற்ற தனக்கெதிரான எதிர்மறை பிரச்சாரங்கள் குறித்து மனம்திறந்த அவர். தன்னை பிடிக்காத சிலர் அல்லது தன்னை வெறுப்பவர்கள், சிலருக்கு பணம் கொடுத்து சமூக வலைதளங்களில் ட்ரோல்கள், மீம்ஸ்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்ப வைப்பதாகவும், அதன் மூலம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாகவும் தெரிவித்தார். Related Link அந்த காரை இப்போ யார் வச்சிருக்கா?