Also Watch
Read this
By: Manigandan Raja

"CON CITY" திரைப்படத்தின் டைட்டில் டீசர் :
ஹாரிஸ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ்,அன்னா பெண், யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் "CON CITY" திரைப்படத்தின் டைட்டில் டீசர் யூடியூபில் வெளியாகியுள்ளது. பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிகிறது.

யூத் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியீடு :
யூத் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாக இருக்கிறது. கென் கருணாஸ் எழுதி, இயக்கி இருக்கும் யூத் திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் வெளியிடுகிறார்.
இது குறித்து படக்குழு சார்பில் புது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

துரந்தர் 2” பட டிரெய்லர் இன்று வெளியீடு :
ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான ‘துரந்தர்’ இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் இன்று காலை 11.01 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘துரந்தர்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ரன் டைம் 4 மணி நேரம் இருக்கும் என்பதால்ன் முதல் பாகத்தை போல் 2ம் பாகத்திலும் பரபரப்பு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Poes Garden-ல் வீடு வாங்கிய நயன்தாரா விக்னேஷ் சிவன் :
நடிகை நயன்தாராவும், கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனும் இணைந்து போயஸ் கார்டனில் புதிதாக ஒரு சொகுசு டூப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 31 கோடியே 50 லட்சம் மதிப்பிலான இந்த வீட்டின் 90சதவீத பங்கினை நயன்தாரா வைத்திருக்க, 10 சதவீத பங்கினை விக்னேஷ் சிவன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved