மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வைத்து விற்று சிறைக்கு சென்ற வந்தாலும் பட்டாசு வெடித்து பாராட்டுவார்கள், சமூக திரைப்படங்களை பாராட்ட மாட்டார்கள் என சீமான் தெரிவித்தார். சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நந்தன் படத்திற்கான பாராட்டு விழாவில் பேசிய அவர், நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால், அரசு சார்பில் திரைப்படங்கள் தயாரிக்கப்படும் என்றார்.