news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஜூனில் தொடங்கும் சார்பட்டா பரம்பரை-2 படப்பிடிப்பு
tv

Also Watch

tv

Read this

ஜூனில் தொடங்கும் சார்பட்டா பரம்பரை-2 படப்பிடிப்பு

சார்பட்டா பரம்பரை-2

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சினிமா செய்திகள்

மே முதல் வாரத்தில் தொடங்கும் AK 64 படப்பிடிப்பு பணிகள் :

குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன்-அஜித் கூட்டணியில் உருவாகும் AK 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துபாயில் கார் ரேஸ் மற்றும் விளம்பர படப்பிடிப்பு பணிகளில் அஜித் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். தான் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் முன்வராததால்,அஜித்தே இத்திரைப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

'ஹிப் ஹாப் தமிழா' ஆதியின் மீசைய முறுக்கு-2 :

'HIP HOP தமிழா' ஆதி இயக்கி நடித்துள்ள மீசைய முறுக்கு-2 திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ள நிலையில், 'பப்பாளி பழமே' வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. முன்னதாக திரைப்படத்தின் டீசர் மற்றும் ஆரா பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

குஷ்பு-சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு கதாநாயகன் ஆதியே இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

'MICHAEL' திரைப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு :

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுப்படமான 'MICHAEL' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உலகெங்கிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் கதாபாத்திரத்தில் அவரது அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் நடித்துள்ளார்.

ஆண்டோயின் புகுவா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

ஜூனில் தொடங்கும் சார்பட்டா பரம்பரை-2 படப்பிடிப்பு :

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் ((Mr.X)) திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை ஆர்யா பகிர்ந்துள்ளார்.

ஜூன் மாதம் சார்பட்டா பரம்பரை-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு ப.ரஞ்சித் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஓடிடி தளத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' நல்ல வரவேற்பை பெற்றது.

Related Link
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்







SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓட்டு கேட்டு யாரும் வர வேண்டாம் என பேனர் வைத்த மக்கள்

0
1 hr 31 mins agoshare
Tirupathur








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved