நடிகர் ஜீவா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் இந்தியில் ரீ-மேக் ஆகவுள்ளது. பொங்கல் திருநாளை ஒட்டி, திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிப்படமாக மாறியுள்ளது. இந்த நிலையில், இந்த திரைப்படம் இந்தியில் ரீ- மேக் ஆகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தெரிவித்துள்ளார். பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் போதே, அதன் இந்தி ரீ-மேக் உரிமம் பெறப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. Related Link அரசன் திரைப்படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார்?