திரைப்படத்தை மேலும் மெருகேற்றுவதற்காக செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக இருந்த பாலையா நடித்த அகண்டா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாகவும், விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் பாலையா நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2-ஆம் பாகம் உருவாகியுள்ளது.