ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள “புரோ கோட்” (( BRO CODE)) திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.