நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண வீடியோவை இவ்வாண்டின் இறுதியில் ஒளிபரப்ப உள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. நடிகை நயன்தாரா கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை மணந்து கொண்டார். இந்த திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமையை பெற்ற பிரபல நெட்ஃப்ளிக்ஸ் தளம், அதிகளவில் கண்டெண்ட் இல்லாததால் ஒளிபரப்ப மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த சச்சரவுகள் முடிந்து, Nayanthara : Beyond the fairy tale என்ற தலைப்பில் 81 நிமிட காட்சியாக ஒளிபரப்ப முடிவெடுத்துள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.