Also Watch
Read this
By: Web Team

பலூசிஸ்தானை தனி நாடு என கூறிய பாலிவுட் நடிகர் சல்மான் கான் பாகிஸ்தானில் கண்காணிக்கப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என வெளியான செய்தியை பாகிஸ்தானின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.
பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக இருக்கும் பலூசிஸ்தானில் தனி நாடு கேட்டு தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதற்கு சல்மான் கான் ஆதரவு அளித்தார் எனவும் அதற்காக அவரை பயங்கரவாதியாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால் பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் நான்காவது அட்டவணையின் கீழ் அவரை பயங்கரவாதியாக அறிவிக்கவில்லை எனவும் அது தவறான தகவல் எனவும் பாகிஸ்தானின் உண்மை அறியும் குழு தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved