மலையாள நடிகர்கள் மீது நடிகைகள் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு, கேரள அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதால், கேரள அரசு திரைப்பட அகாடமி தலைவராக இருந்த நடிகர் ரஞ்சித், மலையாள நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருந்த நடிகர் சித்திக் ஆகியோர் பதவி விலகினர். இவ்விவகாரம் தொடர்பாக ஞாயிறன்று காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டார். ஐ.ஜி ஸ்பர்ஜன் குமார் ((Sparjan Kumar)) தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், மூத்த பெண் காவல்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.