news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

tv

Read this

பெண்களின் சபரிமலை - குவியும் பக்தர்கள்

கன்னியாகுமரி

21

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
knk 1(2)

பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில்ல் மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்ற நீதிபதி அறநிலையத்துறை அதிகாரிகள் தமிழக கேரளா பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். 10-நாட்கள் நடைபெறவுள்ள திருவிழா பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவில் இருந்து வரும் பெண் பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் இது பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் வருடா வருடம் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருட மாசிக்கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கோயில் தந்திரிகள் கொடியை ஏற்றி வைத்த நிலையில் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் அழகுமீனா, உயர் நீதமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி விஜயவசந்த் எம்.பி, அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகம் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் அம்மனுக்கு மூன்று கால பூஜைகள் வெள்ளி பல்லக்கில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

800-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
பத்தாவது நாள் இரவு சிகர நிகழ்சியான ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவடையும் நிலையில் மார்ச் 10-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறையும் விடப்படுகிறது. கோயில் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5-மாவட்டங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Related Link
மாசி மகத்தேர் திருவிழா

மாசி மகத்தேர் திருவிழா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வைபவ் சூர்யவன்ஷி குறித்து யுவ்ராஜ் சிங் கருத்து

0
11 hrs 41 mins agoshare
Sports 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved