Also Watch
Read this
By: Manigandan Raja

வரி விதிப்புகள் :
அமெரிக்க அதிபர் டிரம்ப், மற்ற நாடுகளுக்கு விதித்த வரிகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. டிரம்ப்பின் வரி விதிப்பை எதிர்த்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்து செய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் ஆதரித்தும் தீர்ப்பு வழங்கினர். நீதிபதிகள் தங்களது உத்தரவில், அமெரிக்காவின் சர்வதேச அவசர நிலைபொருளாதார சட்டத்தின்படி வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும்.
வரி விதிக்க நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved