news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews இன்றைய சர்வதேச நிகழ்வுகள்
tv

Also Watch

tv

Read this

இன்றைய சர்வதேச நிகழ்வுகள்

கம்போடியா

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சர்வதேச செய்திகள்

தாய்நாடு திரும்பிய ஈராக் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு : 

40ஆண்டுகளுக்குப் பிறகு 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற ஈராக் அணி தாய்நாடு திரும்பிய நிலையில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொலிவியாவை 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கடைசி நேர வாய்ப்பை தட்டிச் சென்ற கால்பந்து அணி வரலாற்றுச் சிறப்புமிக்க தகுதி பெற்றுள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து தாய்நாடு திரும்பிய ஈராக் அணி ஊர்வலமாக வந்தபோது, பாக்தாத் உள்ளிட்ட ஈராக் நகரங்களில் ரசிகர்கள் கொடி அசைத்து, பாடல்களைப் பாடி தெருக்களில் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

எலியை பெருமைப்படுத்தும் விதமாக கம்போடியாவில் சிலை : 

தனது வாழ்நாளில் 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்து மக்களின் உயிரை காப்பாற்றிய எலியை பெருமைப்படுத்தும் விதமாக கம்போடியாவில் உலகின் முதல் எலி சிலை அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு தினத்தை ஒட்டி மாகவா என்ற எலிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

விலங்குகளின் வீரத்துக்காக தங்க பதக்கம் பெற்ற அந்த எலி, ஓய்வு பெற்ற பின் தனது எட்டு வயதில் உயிரிழந்தது.

வடக்கு இந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : 

வடக்கு இந்தோனேசியாவின் தலவுட் தீவு அருகே 6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸின் மிண்டானோ தீவில் உள்ள Sarangani மாகாணத்திலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிலும், 99 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடுக்கம் லேசாக மட்டுமே உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக கூட இந்தோனேசியாவில் 7.6 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

நாசா விண்வெளி வீரர்கள் வரும் 6ஆம் தேதியே நிலவை அடைவார்கள் : 

நாசாவின் விண்வெளி வீரர்கள் வரும் 6ஆம் தேதியே நிலவை அடைவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கடந்த 1ஆம் தேதி ராக்கெட் ஏவப்பட்ட நிலையில், பூமியின் வட்டப்பாதையில் ஒரு நாளை கழித்து பின் ஓரியன் விண்கலம் நிலவை நோக்கி புறப்பட்டது.

10 நாட்கள் இப்பயணத்தில் 6 ஆம் தேதியே வீரர்கள் நிலவை அடைவார்கள் என்ற நிலையில், அங்கு ஆய்வை முடித்த பின் பூமிக்கு திரும்ப உள்ளனர்.


Related Link
இன்றைய வெளிநாட்டு  செய்திகள்

இன்றைய வெளிநாட்டு செய்திகள்





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

3
4 hrs 10 mins agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved