news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உலகிலேயே அமெரிக்க ராணுவம்தான் தலைசிறந்தது
tv

Also Watch

tv

Read this

உலகிலேயே அமெரிக்க ராணுவம்தான் தலைசிறந்தது

அமெரிக்கா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிபர் டிரம்ப் பெருமிதம்

துப்பாக்கிச் சூடு குற்றவாளி கைது: அதிபர் டிரம்ப் பெருமிதம் :

உலகிலேயே அமெரிக்க ராணுவம்தான் தலைசிறந்ததாக விளங்குவதாக அதிபர் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார். வாஷிங்டன் விருந்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பேசிய அவர், இதுபோன்ற நிகழ்வுகள் அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் எண்ணற்ற அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

வர்த்தகத்திலும், ராணுவத்திலும் அமெரிக்காதான் உலகை வழிநடத்துவதாக கூறிய அவர், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார். மேலும், அணு ஆயுதத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்திருந்தால் தாம் இலக்காக இருந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

UAE அதிபரை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் :

சவுதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் நயத் அல் நயானை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இரு நாட்டு உறவு, மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம், இரு நாட்டு பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அஜித் தோவல் அரசு முறை பயணமாக கடந்த 20-ம் தேதி சவுதி அரேபியாவுக்கு சென்றார்.

பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் பலி :

பயங்கரவாத தாக்குதலில் மாலி நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் சடியொ கெமரா கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் பமாகோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து அல்கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அப்போது, பமாகோவில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் வீட்டின் மீதும் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அமைச்சர் ஜெனரல் சடியொ கெமரா உயிரிழந்தார். அதேசமயம், அதிபர் அசிமி கொமிடா பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக மாலி அரசு தெரிவித்துள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் மீண்டும் பாகிஸ்தான் பயணம் :

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மீண்டும் பாகிஸ்தான் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் தொடர்பான 2-வது கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்பு தூதர் மற்றும் டிரம்ப் மருமகன் ஆகியோர் பாகிஸ்தான் செல்வதாக அறிவிக்கப்பட்டது.

அதேசமயம், அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்த அப்பாஸ் அராக்சி, அமெரிக்க தூதர் குழுவை சந்திக்காமல் சென்று விட்டார். இதனால், தூதர் குழு பயணத்தை டிரம்ப் ரத்து செய்தார். இந்த சூழலில், மாஸ்கோ செல்வதற்கு முன்பாக அப்பாஸ் அராக்சி மீண்டும் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

Related Link
புத்த பிட்சுக்களிடம் ரூ.110 கோடி போதை பொருள் பறிமுதல்

புத்த பிட்சுக்களிடம் ரூ.110 கோடி போதை பொருள் பறிமுதல்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆந்திராவில் நிலவும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு

5
1 hr 19 mins agoshare
ஆந்திரா பெட்ரோல் தட்டுப்பாடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved