news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "கருப்பு" திரைப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல்
tv

Also Watch

tv

Read this

"கருப்பு" திரைப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல்

கருப்பு

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RJ பாலாஜி

இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பேச்சு :

"கருப்பு" திரைப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் திரைப்படமாக இருக்கும் என அந்த படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்தார். மதுரையில் நடைபெற்ற கருப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர்.

படத்தின் முதல் பாதி ரொம்ப ஸ்டிராங்காவும், இரண்டாவது பாதி பொழுதுபோக்கு மிகுந்ததாக இருக்கும் எனவும், தியேட்டர் அம்சங்கள் நிறைந்த ரசிகர்கள் பார்க்க ஆசைப்பட்ட சூரியாவை படத்தில் பார்க்க முடியும் என்றார்.

போட்டியாளர்கள் குறித்த கேள்விக்கு தனுஷ் பதில் :

'எப்போதுமே நம்ம தனி வழிதான்' என போட்டியாளர்கள் குறித்த கேள்விக்கு நடிகர் தனுஷ் பதிலளித்துள்ளார். கோவையில் நடைபெற்ற ‘கர’ திரைப்படத்திற்கான புரமோஷன் விழாவில், "ரஜினி - கமல், விஜய் அஜித் என போட்டிகள் இருந்தது.

அப்படி தனுஷின் போட்டியாளர் சூர்யாவா? கார்த்தியா? ரவி மோகனா?" என இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தனுஷ் 'நம்ம எப்பவுமே தனி வழிதான்' என சிம்பிளாக பதிலளித்தார்.

திரை கதைகளை பாலின ரீதியாகப் பிரிப்பது தேவையற்றது :

திரைப்படங்களில் கதைகளை பாலின ரீதியாகப் பிரிப்பது தேவையற்றது என நடிகை பார்வதி தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், நாம் உருவாக்கும் படங்களை பெண்களை மையப்படுத்திய படங்கள் எனத் தனியாகப் பிரிக்கக் கூடாது எனவும்.

அனைத்துக் கதைகளும் மனிதர்களை மையப்படுத்திய கதைகளாகவே சொல்லப்பட வேண்டும்” என கூறினார். மேலும் “பெண்களின் கதைகளை மனிதர்களின் கதைகளாகப் பார்க்காமல், 'அது பெண்களின் கதை' எனத் தனிமைப்படுத்துவதுதான் இங்குள்ள மிகப்பெரிய பிரச்சினை,” என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு :

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'திரிஷ்யம்' திரைப்படத்தின் 3-ம் பாகம் மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.

இந்தி மொழியில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சல்கோன்கராக அஜய் தேவ்கன், தபு, ஷ்ரியா சரண், இஷிதா தத்தா, ரஜத் கபூர் மற்றும் அக்சய் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்துள்ளனர். இப்படம் மே 21ம் தேதி வெளியாக உள்ளது.

Related Link
அரசன் படப்பிடிப்பில் சமுத்திரக்கனி பிறந்தநாள் கொண்டாட்டம்

அரசன் படப்பிடிப்பில் சமுத்திரக்கனி பிறந்தநாள் கொண்டாட்டம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆந்திராவில் நிலவும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு

5
1 hr 5 mins agoshare
ஆந்திரா பெட்ரோல் தட்டுப்பாடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved