உக்ரைனுடனான மோதல் உலகளாவிய மோதலாக விரிவடைந்து வருவதாக ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். ரஷ்ய தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அதிபர் புதின், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு மேம்பட்ட ஆயுதங்களை வழங்கி நிலைமை மேலும் மோசமடைய செய்துள்ளதாகவும், மேற்கத்திய நாடுகள் கவனமுடன் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.