வான்வெளி தற்காலிகமாக மூடல் : போர் பதற்றம் காரணமாக ஐக்கிய அரபு அமீரக வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்கு சிறு விமானங்கள், டிரோன்கள் பறக்க அமீரக அரசு தடை விதித்துள்ளது. வான் பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட சில விமானங்கள் மட்டும் சூழ்நிலை கருதி வான் வெளியில் பறக்க அனுமதிக்கப்படும் எனவும் அமீரக அரசு அறிவித்துள்ளது. நிலைமை இயல்புக்கு திரும்புவதை பொறுத்து டிரோன்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Related Link ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சி காவல்படை