Also Watch
Read this
Posted on: Nov 21, 2025 03:12 PM
By: Web Team

இந்தியாவுக்கு தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டீல்த் போர் விமானமான Su-57-ன் தொழில்நுட்ப பரிமாற்றத்தை வழங்க தயாராக உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவுக்கு F-35 ஃபைட்டர் ஜெட் விமானங்களை கொடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்த நிலையில் ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது. வேறு எந்த நாடும் தனது பாதுகாப்பு தொழில்நுட்பத்தை இந்த அளவுக்கு அணுக இந்தியாவுக்கு வழங்கியதில்லை. Su-57 போர் விமானங்களின் உற்பத்தியை படிப்படியாக இந்தியாவிற்கு மாற்றுவதே இந்த திட்டம் என ரஷ்ய அரசாங்கத்திற்குச் சொந்தமான பாதுகாப்பு கூட்டு நிறுவனமான ரோஸ்டெக்கின் தலைமை நிர்வாக அதிகாரி செர்ஜி செமசோவ் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved