இங்கிலாந்தில் லாட்டரி மூலம் ஒருவருக்கு ஒரே நாளில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் பணப்பரிசு கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து லாட்டரி வரலாற்றில் இதற்கு முன்பு ஒரு முறை 195 மில்லியன் பவுண்டுகளும், 184 மில்லியன் பவுண்டுகளும் பரிசாக கிடைத்துள்ள நிலையில், தற்போது கிடைத்திருப்பது, மூன்றாவது பெரிய பரிசுத் தொகையாகும். ஒரே நாளில் லாட்டரி மூலம் கோடீஸ்வரரான அந்த நபர், தற்போதைக்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரி ஸ்டைல்ஸை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக மாறியிருக்கிறார்.