பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் : ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள போராளிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் உள்ள வெவ்வேறு மாவட்டங்களில் தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கூறிய நிலையில் அதனை பாகிஸ்தான் ராணுவமும் உறுதி படுத்தி உள்ளது. ஆப்கன் போராளிகளின் தற்கொலைப் படை தாக்குதல்களுக்குப் பதிலடியாக தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் ((TTP))மற்றும் அதன் துணை அமைப்புகளின் 7 முக்கிய மறைவிடங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. Related Link ஈரான் தலைவர் கமேனியை கொ*ல அமெரிக்கா திட்டம்?