news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியதாக புகார்
tv

Also Watch

tv

Read this

தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியதாக புகார்

டெல்லி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் மோடி

இந்திய வந்துள்ள தென்கொரிய அதிபர் : 

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபர் லீ ஜே மியுங்-க்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் ஒத்துழைப்பு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியதாக புகார் : 

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக 700-க்கும் மேற்பட்ட குடிமக்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்தது குறித்து கடந்த சனிக்கிழமை நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, விதிகளை மீறி எதிர்க்கட்சிகள் மீது புகார் கூறியதாக சொல்லப்படுகிறது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொன்றதே மோடி தான் :

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொன்றதே பிரதமர் மோடி தான் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார். மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹர் ((Cooch Behar)) பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், தாங்கள் தொகுதி மறுவரையறை மசோதாவைத் தான் எதிர்த்தோமே தவிர, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அல்ல என்றார்.

100 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து :

ஜம்மு- காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து, 100 அடி பள்ளத்தில் தலைக்குப்புற விழுந்து விபத்துக்குள்ளானதில், 20 பேர் உயிரிழந்த நிலையில் 36 பேர் காயமடைந்துள்ளனர். ராம் நகரில் இருந்து உதம்பூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, கானோட் கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.

முழு அடைப்பு போராட்டம் - மக்களின் வாழ்க்கை பாதிப்பு :

மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, மாநிலங்களின் பல்வேறு இடங்களில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவர்களின் குடும்பத்திற்கு நீதி கேட்டு, மணிப்பூரில் 5 நாட்களுக்கு முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

Related Link
பெண்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்ட எதிர்க்கட்சிகள் - மோடி சாடல்

பெண்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்ட எதிர்க்கட்சிகள் - மோடி சாடல்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
1 hr 32 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved