Also Watch
Read this
By: Manigandan Raja

இண்டர் காஷியை எளிதில் வீழ்த்திய பஞ்சாப் FC :

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்று வரும் 12-ஆவது ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியில் இண்டர் காஷி((Inter Kashi FC)) அணியை பஞ்சாப் FC அணி எளிதில் வீழ்த்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் சமீர், ஆட்டத்தின் 37ஆவது நிமிடத்திலும், எபியோங் 51ஆவது நிமிடத்திலும், அமராச்சி 72ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முடிவில் 3க்கு 0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் FC அணி வெற்றி பெற்றது.
போட்டியில் தோற்றாலும் 6-வது இடத்தில் நீடிக்கும் குஜராத் :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 7-வது இடத்திற்கு முன்னேறியது..! அதேசமயம் போட்டியில் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து 6-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடத்திலும், கொல்கத்தா அணி கடைசி இடத்திலும் உள்ளன.
ஐபிஎலில் முதல் சதத்தை பதிவு செய்த திலக் வர்மா :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் திலக் வர்மா சதமடித்து அசத்தினார்..! 45 பந்துகளில் 7 சிக்சர்கள், 8 பவுண்டரிகளை விளாசி 101 ரன்களை அடித்து அதிரடி காட்டினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் அவர் பதிவு செய்தார்.
நடப்பு சீசனில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா :

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகபந்து வீச்சாளர் பும்ரா, நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். கடந்த 5 போட்டிகளாக விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை என்பதால் அவரின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் முதல் பந்திலேயே குஜராத் அணியின் சாய் சுதர்சன் விக்கெட்டை கைப்பற்றினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு 2ஆவது வெற்றி :
ஐபிஎல் தொடரின் 30-ஆவது லீக் போட்டியி விளையாட்டு செய்திகள் ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 15.5 ஓவர்களில் 100 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved