காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். ட்ரம்பின் திட்டம் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலிய மக்களுக்கும் மேற்கு ஆசிய பிராந்தியத்திற்கும் நீண்டகால நிலையான அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஒரு சாத்தியமான பாதையை வழங்கும் என மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ட்ரம்பின் முயற்சிக்கு இருதரப்பும் ஆதரவளித்து மோதலை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என நம்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். https://x.com/narendramodi/status/1972862306993242208https://x.com/narendramodi/status/197286230699324220