சீன அதிபர் ஜி ஜின் பிங்கை 2 வாரங்களில் சந்திக்க இருப்பதாகவும், அந்நாட்டின் மீதான 100% வரி விதிப்பு நிலையானது அல்ல எனவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.சீனப் பொருட்களுக்கான வரி விதிப்பு ஏற்கனவே 30 சதவீதமாக இருக்கும் நிலையில், தற்போதைய 100 சதவீதத்தையும் சேர்த்து 130 சதவீதமாக அமெரிக்கா அதிகரித்தது. இந்த வரி விதிப்பிற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது குறித்து பேசிய டிரம்ப், 100 சதவீத வரிகள் நீடிக்க முடியாதவை என்றும், இத்தகைய நடவடிக்கை நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.