ரஷ்யாவின் ஸ்டாரிட்சா நகரில் நூற்றுக்கணக்கான சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்ற கரண்டாஷ் விழா என்று அழைக்கப்பட்டும் Street Circus திருவிழா நடைபெற்றது. மத்திய ரஷ்யா, மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பார்க்கை சேர்ந்த சர்க்க்ஸ் கலைஞர்கல் விதவிதமான வேடங்களில் உலா வந்ததை மக்கள் கண்டு ஆரவாரம் அடைந்தனர். நவீன கால பொழுதுபோக்கு டிஜிட்டல் மயமாகிவிட்டாலும், சர்க்கஸ் இன்னும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளதாக திருவிழாவில் பங்கேற்ற பார்வையாளர்கள் தெரிவித்தனர்.