கிரிமினல் சதித்திட்டம் வகுத்தார் என்ற குற்றச்சாட்டில் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, பாரிசின் மிகவும் கொடூரமான லா சென்டே சிறையில் இன்று அடைக்கப்பட்டார். நவீன பிரான்சின் வரலாற்றில் சிறையில் அடைக்கப்படும் முதலாவது முன்னாள் அதிபரான சர்கோஸி, 2007 அதிபர் தேர்தலில் லிபியாவில் இருந்து சட்டவிரோதமாக நிதி உதவி பெற்றார் என்ற குற்றச்சாட்டிலும் தண்டிக்கப்பட்டார். அவரது தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் நடவடிக்கை ஒருபுறம் நடக்கும் நிலையில், எழுபது வயதான அவர், தமது மனைவியுடன் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளை சந்தித்து விட்டு சிறைக்கு சென்றார்.அப்பாவியான தாம் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படுவதாகவும் இறுதி வரை போராடி வெற்றி பெற உள்ளதாகவும் சர்கோஸி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.