பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய புவலாய் புயலால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். குவாங் பகுதியில் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின. 1,400 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். கோர பாதிப்பை ஏற்படுத்திய புவலாய் புயல் வியட்நாம் நோக்கி நகர்ந்துள்ள சூழலில், அங்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.