ஜப்பானில் பிராந்திய கட்சிக்கு தலைவராக பென்குயின் என்ற பெயர் கொண்ட ஏஐ நியமனம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் 'Path to rebirth' என்ற பெயர் கொண்ட பிராந்திய கட்சி, சமீபத்தில் அந்நாட்டு பார்லிமென்ட் மேல்சபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டது. அதில் போட்டியிட்ட 10 இடங்களிலும் தோல்வியையே தழுவியது. அக்கட்சியின் நிறுவனரும் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதற்கு முன்னதாக மாகாண தேர்தலிலும் அக்கட்சி அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. தொடர் தோல்வி காரணமாக கட்சி தலைவராக இருந்த இஷிமரு தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவராக ஏஐ நியமனம் செய்யப்பட்டு உள்ளது.இதையும் படியுங்கள் : முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தேர்தலில் வாக்களிக்க தடை ஷேக் ஹசீனா குடும்பத்தினரும் தேர்தலில் வாக்களிக்க தடை